இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் விளையாட உள்ளது.
இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் மாதம் 18ஆம் தேதி இங்கிலாந்திற்கு செல்ல உள்ளது. இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன், மும்பையில் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளனர். கிட்டத்தட்ட மூன்றரை மாதம் நீண்ட தொடராக நடைபெறுவதால், குடும்பத்தினரையும் உடன் அழைத்து செல்லலாம் ,என்று பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. ஆனால் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்படுதலில் இருக்கவேண்டும் என்று பிசிசிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் மும்பையில் வீரர்கள் 8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமையில் இருக்க உள்ளனர்.
மொத்தமாக 18 நாட்கள், இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 27 ம் தேதியில் இருந்து ,தொற்று பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொடுகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து இருப்பதால் , இங்கிலாந்து அரசுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று போட்டியில் விளையாடவுள்ள நிலையில் , தற்போது அதிகரித்துள்ள தொற்று பாதிப்பு பிசிசிஐ-க்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக இலங்கையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இங்கிலாந்திலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.