Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்…. பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் …!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்பு இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமன் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்தில் முடிவுக்கு வந்தது. இதனால் தகுதியுடையவர்கள், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று , பிசிசிஐ ஏப்ரல் மாதம் அறிவித்தது. எனவே இந்தப் பதவிக்கு  டபிள்யூ. வி.ராமன் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரமேஷ் பவார் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவரான ஹேமலதா கலா உள்ளிட்ட 35 பேர் ,இந்தப் பதவிக்கு விண்ணப்பித்தனர். இதில் 8 பேரை இறுதி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு ,அவர்களிடம் மதன்லால் தலைமையில் நடந்த கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி  நேர்காணல் நடத்தியது.இறுதியாக இந்தப் பதவிக்கு  ரமேஷ் பவார்  நியமிக்கப்பட்டுள்ளதை ,பிசிசிஐ நேற்று அறிவித்தது.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான இவர், 2 டெஸ்ட் போட்டி மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின், இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வந்தபோது, இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி சுற்றில் ,இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணியின் மிதாலி ராஜ் சேர்க்கப்படாமல்  இருந்தது, மிகப் பெரிய பிரச்சனையை கிளப்பியது. இதனால் மிதாலி ராஜ் மற்றும் ரமேஷ் பவார் இருவருக்கு இடையே,  மோதல் ஏற்பட்டது . இதனால் ரமேஷ் பவாரின்  ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு ,ரமேஷ் பவார் பயிற்சியாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

Categories

Tech |