Categories
விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கம்: இந்திய வீரர் -வீராங்கனைகள்…வெளிநாடு பயணத்தின் போது ,கவனமுடன் இருக்க வேண்டும் …!!!

இந்த வருடத்திற்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ,இந்திய வீரர் -வீராங்கனைகள் வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சிகள் மற்றும் போட்டிகளில்  கலந்து கொண்டு வருகின்றன. ஆனால் தற்போது கொரோனா  வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் சூழலிலும் ,வீரர்கள் பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று வருகின்றன .இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரானரா நரிந்தர் பத்ரா ,தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு, சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ,பயிற்சிகள் மற்றும் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள் ,பயிற்சி அதிகாரிகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம். இதனால் வெளிநாடுகளுக்கு சென்று ,பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு பயிற்சிக்கு செல்லும் வீரர்கள், அதிகாரிகள் கொரோனா  கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து ,நடக்க வேண்டும் என்றார். அதோடு வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கொரோனா கட்டுப்பாடு விதிகளை, கட்டாயம் கடைபிடித்து நடக்க வேண்டும் ,என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |