Categories
தேசிய செய்திகள்

‘கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்’…. இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் உரை….!!

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் காணொளி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றுள்ளது. அதிலும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது “பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும்.

மேலும் நடமாடும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும். நம் நாட்டில் 12,00,00,000க்கும் அதிகமானோர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்த ஆயத்தமாக இருக்கின்றனர். தற்பொழுது 79% பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து 38% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதிலும் 18 வயதுக்கு மேலான அனைவரும் கட்டாயமாக முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இதனை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |