Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா டீம்ல விளையாடுறதுக்கு …! இவருக்கு எல்லா தகுதியும் இருக்கு… பாராட்டிய கம்பீர்…!!!

ஆர்சிபி அணியின் இளம் வீரரான படிக்கலை பற்றி, கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன்களை ஆர்சிபி அணி 16.3 ஓவர்களிலேயே முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தினார் . இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்தார் .

அதில் கொரோனா  தொற்றின் காரணமாக, தொடக்கத்தில் நடைபெற்ற போட்டிகளில் படிக்கல் அணியில் இடம்பெறவில்லை. ஆனால் தொற்றிலிருந்து குணமடைந்து, அணியுடன்  இணைந்த படிக்கல்,  முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினார் . ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில், இவர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுமட்டுமில்லாது கடந்த ஐபிஎல் சீசனில்  ஆர்சிபி அணிக்காக அதிக ரன்களை குவித்துள்ளார்.  இவர் அணிக்காக பொறுப்புடன் ஆடுவதால் , வருங்காலத்தில் இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற்று சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |