Categories
உலக செய்திகள்

“இதுக்கு நீங்க தான் சரியான ஆளு” … இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி… பைடனின் அசத்தல் முடிவு…!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு அமெரிக்க ஜனாதிபதியின் அமைச்சரவையில் முக்கிய பதவி கிடைத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டு பிரிட்டனில் பிறந்தவர்தான் விவேக் மூர்த்தி. இவருக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அமைச்சரவையில் முக்கிய பதவி ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன தெரியுமா? தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் பதவி. விவேக் மூர்த்தியை தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்தார்.

இந்நிலையில் அந்த நியமனத்திற்கான மசோதா செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சபையில்  57 க்கு 43 என்ற கணக்கில் விவேக் மூர்த்திக்கு ஆதாரவாக வாக்குகள் கிடைத்துள்ளது. இதனால் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தியின் நியமன மசோதா நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வெள்ளை மாளிகையில் பல இந்திய வம்சாவளியினர் முக்கிய பதவியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |