Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய வீரர்கள் 2 வது டோஸ் தடுப்பூசியை ….இங்கிலாந்தில் போட்டுக் கொள்வார்கள்… வெளியான தகவல் …!!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பலரும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை  செலுத்தி   கொண்டுள்ளன.

இந்தியாவில் மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டுள்ளனர். இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய அணி வருகின்ற ஜூன் 2 ம்  தேதி இங்கிலாந்திற்கு  புறப்படுகிறது .

இதனால் வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. எனவே முதல் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொண்ட வீரர்கள் ,2 வது டோஸை  செலுத்துவதற்கான காலம் , போட்டி நடைபெறும் சமயத்தில் தான் வரும். இதன் காரணமாக இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் , இங்கிலாந்து  சுகாதாரத் துறையின் 2 வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வார்கள்  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.அத்துடன் இங்கிலாந்து தொடரில் வீரர்கள் யாருக்காவது கொரோனா பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ வந்தால் ,குறிப்பிட்ட நாளில் இங்கிலாந்துக்கு செல்வது பற்றி , ஆலோசிக்கப்படும் என்று  பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Categories

Tech |