டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்து 90 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இதனால் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான முழு விவரங்களை தெரிவிக்குமாறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களை, இந்திய ஒலிம்பிக் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. போட்டியில் பங்குபெறும் வீரர்-வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு சமர்பிக்கப்பட வேண்டி இருப்பதால்,இந்த விவரங்களை கேட்டுள்ளது .
அவர்கள் போடப்பட்ட தடுப்பூசியின் பெயர் மற்றும் ஒவ்வொரு டோஸ் போடப்பட்ட தேதி ஆகிய விவரங்களை அளிக்குமாறு தெரிவித்துள்ளது. அத்துடன் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் எந்த நாட்டிலிருந்து டோக்கியோவிற்கு செல்கின்றன, என்ற முழு விவரத்தையும் தெரிவிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதோடு போட்டிக்கு புறப்படும் முன்பாக வீரர், வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பு நடைமுறைகளை குறித்து முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தி உள்ளது.