‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் பல பிரம்மாண்டமான படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை கொடுத்தவர் . இவர் இயக்கத்தில் வெளியான காதலன், ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன், அந்நியன், சிவாஜி, நண்பன், எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார் . இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது . தற்போது நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராகி வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .
இதனிடையே இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்க இருக்கிறார் . தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை தெலுங்கு பட அதிபர்கள் தில் ராஜூ, சிரிஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர் . இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார் . இது குறித்து அவர் ‘ராம்சரண் படம் குறுகிய கால தயாரிப்பாக இருக்கும். அதற்குள் தேர்தல் பணிகள் முடிவடைந்துவிடும் . இதன்பின் இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் . அதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு நடிப்பார்’ என்று கூறியுள்ளார் .