கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் தடுப்பூசி இலவசமாக பெற நாட்டு மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் கூறினார்.