உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று பட்டியலில் முதலிடத்தில் மேலோங்கி நிற்கின்றது.
புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. அதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வெற்றி வாகை சூடி வருகின்றன. அதன்பின் இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
அதேபோல் இந்திய ஆண்கள் அணி, வியட்நாம் அணியை வீழ்த்தி தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் பங்கேற்ற பெண் வீரர்கள் மனு பாகெட், யாஷஸ்வினி தேஸ்வால், ஸ்ரீ நிவேதா பரமானந்தம் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். அதன்பின் நான் வீரர்கள் அணியில் சவுரப் சவுத்ரி, சார்ஜர் ரிஸ்வி, அபிஷேக் வர்மா போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இன்று வாங்கிய இரண்டு தங்கப் பதக்கங்களை தொடர்ந்து, இந்தியா மொத்தம் 8 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உயர்ந்து நிற்கின்றது.