Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 45 வயது மேற்பட்டோர்க்கு …ஏப்ரல் 1ம் தேதி முதல் கொரோன தடுப்பூசி…பிரகாஷ் ஜவடேகர் தகவல் …!!!

இந்தியாவில் தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதினருக்கு கொரோனா  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே , கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை பொதுமக்கள் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஆர்வத்துடன் செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது 60 வயது மேற்பட்டோர் மற்றும் 45 வயதிற்கு உட்பட்ட இணை  நோய் உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே அடுத்த மாதம்  1-ஆம் தேதியிலிருந்து 45 வயது மேற்பட்டோருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற உள்ளது. இந்தக் குறிப்பிட்ட வயது  பிரிவில் உள்ள பொதுமக்கள் , விரைவாக  தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |