இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும் கோவிஷீல்டு தடுப்பூசி ஐரோப்பிய மருந்துகள் நிறுவனதின் (EMA) ஒப்புதலுக்காகவும், கோவாக்சின் தடுப்புசி உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒப்புதலுக்காகவும் காத்திருக்கின்றது .இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த இரு தடுப்பூசிகளையும் அங்கீகரிக்க தொடங்கியுள்ளது.மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த இரு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை போட்டுக்கொண்ட இந்திய பயணிகள் நாட்டிற்குள் எந்தவொரு கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.
இதையடுத்து சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனேகா மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அயர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த தடுப்பூசியை ஏற்றுக்கொண்டுள்ளார். இதைதொடர்ந்து சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்திய பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளது .மேலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு எஸ்டோனியா அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.