Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 7 ஆண்டுகளில்…. தினமும் கோடி கணக்கில் வங்கியில் ஊழல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் வங்கி ஊழல்களில் கடந்த 7 ஆண்டுகளில் நாள்தோறும் 100 கோடி வரை நஷ்டம் ஏற்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 2015 முதல் டிசம்பர் 2022 வரை 7ஆண்டுகளில் மொத்தம் ரூபாய் 2.50 லட்சம் அளவிற்கு வங்கி ஊழல்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2௦16 ஆம்  வரை ரூபாய் 67 ஆயிரத்து 760 கோடி, 2016 முதல் 2017 வரை ரூபாய் 59 ஆயிரத்து 596 கோடி, 2019 முதல் 2020 வரை ரூபாய் 29 ஆயிரத்து 689 கோடி, 2020 முதல் 2021 வரை ரூபாய் 10 ஆயிரத்து 699 கோடி மற்றும் இந்த ஆண்டு முதல் 9 மாதங்களில்  ரூபாய் 64 ஆயிரத்து 7௦9 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் வங்கி மோசடிகள் லஞ்சம் கொடுத்து மற்றும் பொய் கணக்குகள் மூலம்  கடன்களை ஊழல் செய்து வாங்குதல், போலி டிராப்டுகள் மற்றும் செக்குகள் மூலம் பணம் எடுத்தல், தினசரி நடக்கும் பண பரிவர்த்தனைகளில் ஊழல், வங்கிகளில் உள்ள ரொக்க பணத்தில் குளறுபடிகள், அடமான சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு முறைகளில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழகம், தெலுங்கானா, குஜராத், டெல்லி, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 83% ஊழல்கள் மூலம் ஏற்பட்ட இழப்புகள். இதில் 50% ஊழல் மட்டும் நிதித்துறை தலைமையகமான  மும்பை உள்ளடக்கிய மராட்டியத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் மத்திய நிதி அமைச்சகம்  வங்கி ஊழல்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகளையும், உடனுக்குடன் கண்டறிய  வழிமுறைகளையும் ஏற்படுத்தியதில் மூலம்  வங்கி ஊழல்கள் சற்று கட்டுப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |