இந்தியாவில் குறைவான பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகின்றது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகின்றது. கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,000 என்ற அளவில் இருந்து வருகிறது. இன்றும் 10,050 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,97,202 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரு நாள் மட்டும் 5,259 குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்த எண்ணிக்கை 1,46,238ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மருத்துவமனையில் 1,42,475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 369 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் இதுவரை 8,477 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மகராஷ்டிரா மாநிலத்தில் 3,607 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 97,648 ஆக உயர்வு உள்ளது. அடுத்தபடியாக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 38,716 ஆகவும், டெல்லியில் 1,877 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 34,687ஆகவும் பாதிப்பு உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 52, 13,140 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது உலக அளவில் நாலாவது அதிக எண்ணிக்கையாகும். அதிகபட்சமாக அமெரிக்கா 2,28,14,010 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.