இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் இங்கிலாந்திற்கு வருபவர்களை தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த தாக்குதல் மற்ற நாடுகளிலும் எதிரொலித்து வருவதால் இந்தியாவுடனான விமானப் போக்குவரத்து சேவையை அனைத்து நாடுகளும் நிறுத்த தடை விதித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஏப்ரல் 7-ந் தேதிவரை இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு 3 ஆயிரத்து 345 பேர் சென்றுள்ளதாகவும் அவர்களில் 161 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது.
அவர்களில் 101 பேர், இந்தியாவில் உருவான உருமாறிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவை இங்கிலாந்து அரசு சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது மேலும் இங்கிலாந்துக்கு இந்தியாவிலிருந்து வருபவர்கள் ஏப்ரல் 23ஆம் தேதி 4 மணி முதல் தடை அமுலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தை சேர்ந்த மக்கள் 10 நாட்கள் இந்தியாவிலிருந்து வந்தால் அவர்கள் இங்கிலாந்துக்கு வந்த உடன் ஓட்டலில் 10 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவைச் சேர்ந்த இங்கிலாந்து மாணவர்கள் பல்வேறு காரணங்கள் கூறி இங்கிலாந்திற்கு வருவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் இங்கிலாந்திற்கு திரும்புவதற்கு இந்தியா விமான நிலையங்களில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் கேட்டுக் கொண்டபடி இந்தியா அவர்களுக்காக 8 விமானங்களை இயக்க நேற்று முடிவெடுத்திருந்தது.
அந்த கூடுதல் விமானங்களை தரையிறக்க லண்டன் ஹீத்ரு விமான நிலையம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே விமானங்களை தரையிறங்குவதற்கு மறுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் விமானத்தின் கடைசி நேர கூடுதல் அழுத்தத்தை தவிர்க்கவே விமானத்தை மறுத்ததாக லண்டன் விமான நிலையம் விளக்கம் தெரிவித்துள்ளது.