Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசிக்கு …தட்டுப்பாடு இருக்காது…அமைச்சர் ஹர்ஷவர்தன் …!!!

இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி ,அனைத்து மாநிலங்களுக்கும்  தடையின்றி  வழங்கப்படும்  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்பொழுது கொரோனா தொற்றின்  2வது  அலை , இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று மட்டும் 96,982  பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்று அதிகரித்து வரும் அதே சமயத்தில், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 8 கோடியே 31 லட்சத்து 10 ஆயிரத்து 926 பேர் கொரோனா  தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ,மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான ஹர்ஷவர்தன் 11 மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் , இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களின்  சதவீதம் 92.38 ஆக உள்ளதாகவும், தொற்றால் இறந்தவர்களின் சதவீதம் 1.30 ஆக  உள்ளது. தற்போது அதிகரித்துள்ள கொரோனா  தொற்றுக்கு,மக்கள் அதிகமாக கூடிய இடங்களான திருமண நிகழ்ச்சிகள்,தேர்தல் நிகழ்ச்சிகள் மற்றும் விவசாயிகளின் போராட்டம்  ஆகியவையே முக்கிய காரணங்களாக உள்ளது. எனவே தொற்று அதிகரித்து வரும் இந்த சமயத்தில் ,அனைத்து மாநிலங்களுக்கு கொரோனா  தடுப்பூசிக்கு  தட்டுப்பாடு ஏற்படாது என்று அவர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கொரோனா  தடுப்பூசிகள் தடையில்லாமல் , மத்திய அரசு வழங்கிவருவதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |