Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ‘மந்தை எதிர்ப்பாற்றல்’ நிலையை கணிக்க முடியாத சூழல்….!!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் நிலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவில்  மக்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மந்தை எதிர்ப்பாற்றல் என்பது ஒரு சமூகத்தின் வாழும் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு அவர்களில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் பேருக்குஅந்த நோய்க்கான உள்ளார்ந்த எதிர்ப்பாற்றல் ஏற்படுவதை குறிக்கும். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலை எவ்வாறு அமையும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதாவது எத்தனை பேருக்கு தொற்று ஏற்பட்டால் மந்தை எதிர்ப்பாற்றலை  பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால் மக்கள் தொகையில் 60 சதவீதமாக இருக்கும் என்று தொற்று நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நாட்டின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு காலகட்டங்களில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலையை அடையும் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |