இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது .
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை , வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவின் தடுப்பூசிகள் நல்ல பலனை அளிப்பதால், மற்ற நாடுகளும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு, ஆடர்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேபாளம் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ,கூடுதலாக இந்தியாவிடம் கேட்டுள்ளது, இதற்கு இந்தியாவின் தரப்பிலிருந்து ,எந்த பதிலும் அளிக்கவில்லை என தகவல் வெளியாகியது . இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரான அரிந்தம் பக்சி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் ,இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ‘வேக்சின் மைத்ரி’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
‘வேக்சின் மைத்ரி’திட்டமானது ,தற்போது வெற்றிகரமாக நடைபெற்ற வருவதாகவும்,இந்த திட்டத்திற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதன்படி இத்திட்டத்தின் மூலம் 80 நாடுகளுக்கு மேலாக ,சுமார் 6 கோடியே 44 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை,இந்தியா அனுப்பியுள்ளது. இதனால் இந்தியாவிற்கு கொரோனா தடுப்பூசி , தட்டுப்பாடு ஏற்படும் என்று பயப்படத் தேவையில்லை.இந்தியாவின் தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்து விட்ட பின்னரே, வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,என்று ஏற்கனவே தெரிவித்துள்ளோம். இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் ,எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது என்று தெரிவித்தார்.