இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்திய முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (வயது 91) கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல் நிலை சீராக இருந்த நிலையில் அவர் வீடு திரும்பினார். ஆனால் இம்மாத தொடக்கத்தில் அவருக்கு திடீரென்று ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 .30 மணிக்கு காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல்வேறு தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர் . கடந்த சில நாட்களுக்கு முன்பாக மில்கா சிங்கின் மனைவியான நிர்மல் கவுர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
In the passing away of Shri Milkha Singh Ji, we have lost a colossal sportsperson, who captured the nation’s imagination and had a special place in the hearts of countless Indians. His inspiring personality endeared himself to millions. Anguished by his passing away. pic.twitter.com/h99RNbXI28
— Narendra Modi (@narendramodi) June 18, 2021