Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய …! ராஜஸ்தான் ராயல்ஸ் அணி … 7.5 கோடி ரூபாய் நன்கொடை…!!!

இந்தியாவில் கொரோனா  வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் , ஐபிஎல் போட்டியின் இடம் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 7.5 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின்  2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. மக்கள் நோயினால் அவதிப்பட்டும் , ஆக்சிசன் தட்டுப்பாட்டாலும்  மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியாவிற்கு ஆக்சிசன் மற்றும் மருந்துகளுக்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கின்றன. சில தினங்களுக்கு முன் ஐபிஎல் தொடரில் ,கொல்கத்தா அணியின் இடம்பெற்றுள்ள  பேட் கம்மின்ஸ் 50 ஆயிரம் டாலர்களை , இந்தியாவிற்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அதுபோல ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான  பிரெட் லீயும் ,இந்தியாவிற்கு கொரோனா சிகிச்சைக்கு ஒரு பிட்காயினை  நன்கொடையாக வழங்கினார் .தற்போது ஐபில் தொடரில் எட்டு அணிகளில் ஒன்றான ,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது. ராஜஸ்தான் அணி  7.5 கோடி ரூபாயை கொரோனா  சிகிச்சைக்காக , இந்தியாவிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது . இதைத்தொடர்ந்து ராஜஸ்தானை மையமாக கொண்டுள்ள, ‘ராஜஸ்தான் ராயல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்பவுண்டேசன்’ மூலமாக தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

Categories

Tech |