கனடாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவர்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அவசரகால தேவைகளுக்காக தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்தது. இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் தேவைக்குப் போக மற்றவைகளை அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் மாலத்தீவுகள் பிரேசில் போன்ற பல நாடுகளுக்கு தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து வழங்கப்பட்டது.
இது மட்டுமன்றி தொலைதூரத்தில் உள்ள ஜமைக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. தற்போது தடுப்பூசி கனடா நாட்டிற்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கனடாவில் உள்ள இந்து சமய மக்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய நாட்டிற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கிரேட்டர் டொரண்டா என்ற பகுதியில் பெயர் பலகை வைத்துள்ளனர். அதி இந்தியா மற்றும் கனடா நாட்டிற்கு இடையே நட்பு உறவு நீடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.