2019 உலகக்கோப்பை இங்கிலாந்தில் வருகின்ற மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் விளையாடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக், கோவாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘பாகிஸ்தானுடன் நாம் போரிர் புரிய வேண்டுமா? அல்லது வேண்டாமா?. 2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் நாம் மோத வேண்டுமா?, மோத வேண்டாமா?என்பது குறித்து அதிகம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.
நம் தேசநலனுக்கு எது நல்லதோ? அதனை மட்டும் தான் நாம் செய்ய வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுவது என்பதே கிட்டத்தட்ட ஒரு போர் போன்றது தான். அந்த போரில் நாம் வெற்றி பெற வேண்டுமே தவிர தோற்கக்கூடாது’ என்று தெரிவித்தார்.