இந்தியா-பாகிஸ்தான் படை வீரர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையே சர்வதேச எல்லைப் பகுதியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஊரி எல்லை பகுதி, பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லை, ராஜஸ்தானில் உள்ள பர்மார் எல்லை பகுதிகளில் உள்ள இருநாட்டு வீரர்களும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.