இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தேடியதில் 8 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மாயமான 2 பேரை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சமூக பணி செய்யும் போது இப்படி மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.