இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் போதைப்பொருள் கடத்தல் என்பது பெரும் குற்றமாக கருதப்பட்டு வருகின்றது. அந்நிலையில் அங்கு சென்ற ஜூன் மாதம் போதை பொருள் கடத்தப்பட்டதாக 13 பேர் கொண்ட ஒரு கும்பலை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துள்ளனர். அதில் 3 ஈரானியர், பாகிஸ்தானியர், 9 இந்தோனேசியர்கள் போன்றோர் சிக்கியுள்ளனர்.
அந்த போதை பொருள் கும்பலிடம் 400 கிராம் போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இவர்களை கைது செய்து, மேற்கு ஜாவா மாகாணத்திலுள்ள சுகபூமி நகர நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அந்த போதைப் பொருள் கடத்தலுக்கு திட்டம் தீட்டிய ஈரானியருக்கும், அவரின் மனைவியுடன் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேர் சிக்கிய கும்பலை மரண தண்டனை விதிதத்து சரியானது என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நிறுவனம் கூறுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டின் வழக்கப்படி சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.