Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.. மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி..!!

இந்தோனேசியாவில் அவசரகால உபயோகத்திற்கு மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே அந்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாத முடிவிற்குள் நாட்டிலுள்ள மொத்த மக்கள் 27 கோடியில் சுமார் 18 கோடி மக்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே ஒவ்வொரு நாளும் சுமார் 10 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து தினசரி 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்க முடிவெடுத்திருப்பதாக நாட்டின் சுகாதாரத்துறை கூறியுள்ளது. தற்போது அங்கு சினோவேக், அஸ்ட்ராசெனகா, சினோஃபார்ம் போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இதனையடுத்து மாடர்னா தடுப்பூசி, அவசரகால உபயோகத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக சுகாதார நிறுவனத்தினுடைய கோவேக்ஸ் திட்டபடி, சுமார் 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் இந்தோனேசியாவிற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |