நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவில் இரண்டு தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பல கட்டடங்கள் இடிந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. இந்நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நிலநடுக்கம் 6.2 ஆக பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.