Categories
உலக செய்திகள்

நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு…. பீதியில் மக்கள்…!!

இந்தோனேசியா நாட்டில்  ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியா நாட்டில் கோரண்டலோ என்ற இடத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 160.32 மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் அப்பகுதி மக்கள்  பீதியில் உள்ளனர்.

Categories

Tech |