Categories
பேட்மிண்டன் விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்திய வீராங்கனை பி.வி.சிந்து…. அரையிறுதிக்கு முன்னேற்றம்….!!!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை  சிம் யுஜினுடன் மோதினார் .இதில் 14-21, 21-19, 21-14  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இதையடுத்து நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய ஜோடி சாத்விக்சாய் ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி , மலேசியாவின் கோ ஜே பெய் மற்றும் நூர் இஜுதீன் ஜோடியை எதிர்த்து மோதினர்.இதில் 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்ற இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

Categories

Tech |