இந்தோனேசிய அதிபர் உக்ரைன் போரை நிறுத்த விளாடிமிர் புடின் உடனே உத்தரவிட வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது நான்கு மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் போரை நிறுத்துமாறு ரஷ்ய அரசிடம் கோரியும் எந்த பயனும் இல்லை. இந்நிலையில் இந்தோனேசிய நாட்டின் அதிபரான ஜோகோ விடோடோ, ரஷ்யா, உக்ரேன் நாட்டின்மீது மேற்கொள்ளும் போரை நிறுத்த வேண்டும்.
உலக அளவில், உணவு விநியோகம் மீண்டும் இயங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டில் அமைதி நிலவ மற்றும் உலகளாவிய உணவு பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஜி-7 நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த போரை உடனே நிறுத்த, ரஷ்ய நாட்டு அதிபர் விளாடிமிர் தங்கள் படைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.