இந்தோனேஷியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளின் எதிர்பால் தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்திருக்கிறார்.
இந்தோனேஷியாவில் பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை அறிவிக்கப்பட்டது. அங்கு பாமாயில் எண்ணெயின் விலை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. எனவே, அரசு ஏற்றுமதிக்கு தடை விதித்தது. எனினும், சிறிது காலத்திற்கு தான் இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை எதிர்த்து விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அதிபரான, ஜோகோ விடோடோ, பாமாயில் எண்ணெய் ஏற்றுமதிக்கான தடையானது திங்கட்கிழமையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று அறிவித்திருக்கிறார்.