Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்ட இந்தோனேசியர்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

ரைஸ் குக்கரை திருமணம் செய்த இந்தோனேசிய நபர் ஒருவர் 4 நாட்களில் விவாகரத்து பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் வசித்து வரும் கொய்ருல் அனாம் என்னும் நபர் ரைஸ் குக்கரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அந்த நபர் சட்டபூர்வமாக தனது திருமணத்தை மாற்றுவதற்காக ஆவணங்களிலும் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர் குக்கரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வந்துள்ளது.

இதையடுத்து அந்த நபர் தனது மனைவியை நான்கு நாட்களுக்கு பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். எனவே அவருடைய புது திருமண பந்தம் நீண்ட நாட்கள் நீடிக்காமல் போனது. அதேசமயம் இந்த விவாகரத்திற்கு காரணம் தனது மனைவி அரிசி சமைப்பதில் மட்டுமே கை தேர்ந்தவள், அவளுக்கு வேறு உணவுகளை சுவையாக சமைக்க தெரியவில்லை என்று கொய்ருல் அனாம் கூறியுள்ளார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் வைரலாகவே அந்த நபர் இது போன்ற நாடகத்தை நடத்தியுள்ளார் என்று பலரும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |