நேற்று இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.
நேற்று இந்தோனேசியாவில் உள்ள புளோரஸ் தீவு பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் எழும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இதற்கிடையே நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் சுலவேசி மாகாணத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மங்க்கரை மற்றும் நகீயோ மாவட்டங்களில் உள்ள கடல்களில் 20-க்கும் மேற்பட்ட லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து கடலின் நீர் மட்டம் 7 சென்டிமீட்டர் வரை உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மீட்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தோனேசியாவின் சுமத்தரா பகுதியில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உருவான சுனாமியால் தமிழக கடலோரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.