இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் போட்டியானது இந்தோனேஷியா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்தை சேர்ந்தசுபநிதா கடேதாங்கை எதிர்கொண்டார்.இதில் 21-15, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதையடுத்து நடைபெறும் 2-வது சுற்றில் ஸ்பெயின் வீராங்கனைகிளேரா அசர்மெண்டிசை, பி.வி. சிந்து எதிர்கொள்ள உள்ளார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் உலகின் 10-வது இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த கண்டா சுநேயாமாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.