Categories
உலக செய்திகள்

‘வறுமையின் நிறம் சில்வர்’…. தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை… அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாட்டம்….!!

கைக்குழந்தை ஒன்று பிச்சையெடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படமானது வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பத்து மாத கைக்குழந்தையை வறுமையின் காரணமாக 20,000 rupiahவிற்கு இரவலாக கொடுத்துள்ளார். இதனையடுத்து குழந்தையின் உடல் முழுவதும் சிலவர் நிறச்சாயம் பூசப்பட்டு குறிப்பிட்ட சாலையில் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தியுள்ளனர். இந்த குழந்தை சில்வர் நிறச்சாயத்துடன் இருக்கும் புகைப்படமானது சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இது அனைத்து சமூக ஆர்வலர்களையும் தட்டி எழுப்பி நடவடிக்கை மேற்கொள்ள செய்துள்ளது.

அதாவது இந்தோனேசியாவின் பல பகுதிகளில் பிச்சைக்காரர்கள் உடல் முழுவதும் சில்வர் நிறம் பூசிக்கொண்டு சிலைபோல் நின்று பிச்சையெடுத்து வருகின்றனர். இது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதாவது வறுமையின் காரணமாக மக்கள் இது போன்று செய்வதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த இந்தோனேசியாவின் சமூக விவகாரத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் குழந்தையும் தாயும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

குறிப்பாக இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு  4.94%த்தில் இருந்த வேலையில்லா திண்டாட்டமானது தற்பொழுது 6.9%மாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமையானது கொரோனா தொற்று பாதிப்பு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் நாடு முழுவதும் 2.7 மில்லியன் மக்கள் வேலையில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து 27 மில்லியனுக்கும் மேலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்தவர்களின் எண்ணிக்கையானது 24.79 மில்லியன் ஆகும்.

Categories

Tech |