Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய போட்டியில் டெல்லி, மும்பை அணிகள் மோதல்…!!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதல் இடத்தில் உள்ள மும்பை அணியை எதிர்கொள்ளும் டெல்லி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றை இறுதி செய்யுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்க உள்ள இந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றை உறுதிசெய்ய களமிறங்குகிறது மும்பை அணி. ஆனால் எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வென்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமென்று நெருக்கடியுடன் வலுவான மும்பை அணியை எதிர் கொள்வதால் டெல்லி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் சேய்யர், ஷிகர் தவான் ஆகியோரின் பேட்டிங் கைகொடுக்க வேண்டும்.

அடுத்தடுத்து சதம் அடித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சிக்கர் தவான் கடைசி இரு ஆட்டத்தில் ஒற்றை இலக்கு ரன்களுடன் வெளியேறியது அந்த அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணியுடன் மோதிய ஆட்டங்களில் மும்பை 13 போட்டிகளிலும், டெல்லி  12 போட்டிகளிலும் வென்று உள்ளன. எனவே இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறவுள்ள போட்டியில் சன்ரைசர்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 219 ரன்களை குவித்து வாகை சூடிய நம்பிக்கையுடன் களம் இறங்கும் சன்ரைசர்ஸ் ப்ளே ஆப் சுற்று வாய்ப்புக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா இல்லாத நிலையில் அந்த இடத்தை பாஷ்டோ நிரப்புவார்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. வார்னர் மனிஷ் பாண்டே வில்லியம்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ரசிப்கான், டி. நடராஜன், சந்தீப் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினால் இன்றைய போட்டி சன்ரைசர்ஸ் வசமாகும்.

Categories

Tech |