Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா…டெல்லி சுகாதாரத்துறை தகவல்…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும்  956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4167 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று ஒரே நாளில் 913 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,318 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதுவரை 10,975 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்” என்று கூறியுள்ளது.

Categories

Tech |