கடன் பிரச்சனையால் அவதிப்பட்ட தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொசப்பாளையம் பகுதியில் தொழிலதிபரான சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலூரில் பில்டர்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட சுப்பிரமணி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த சுப்பிரமணியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.