இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது..
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் இன்று (செப்டம்பர் 20) மாலை மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 2020-க்குப் பிறகு முதல்முறையாக இருதரப்பு தொடருக்காக இந்தியாவந்துள்ளது. முதல் போட்டியை வெல்ல இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..
வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இரு நாடுகளும் தங்கள் அணிகளை வலுப்படுத்த இந்தத் தொடர் உதவும். ஆசியக் கோப்பை 2022 இல் சூப்பர் 4 சுற்றில் இருந்து முன்கூட்டியே வெளியேறிவிட்டதால், இந்தியாவுக்கு அவர்களின் பக்கத்தில் சிறிது வேகம் தேவை. எனவே அணியில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க இந்த தொடர் உதவும். அதே சமயம் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியுள்ளதால் இந்திய அணி வலுவுடன் உள்ளது..
இதற்கிடையில், டி20 உலகக் கோப்பையின் நடப்பு சாம்பியனாக ஆஸ்திரேலியா உள்ளது. எனவே மீண்டும் உலக கோப்பையை தக்க வைக்க ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. எனவே டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் வென்று புது தெம்புடன் செல்ல முற்படும்.. இரு அணிகளுமே இன்று நடக்கும் முதல் போட்டியில் வெல்ல போராடும் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
இந்தியா – ஆஸ்திரேலியா டி20 தொடருக்கான அட்டவணை இதோ :
1வது டி20 – செப்டம்பர் 20, 7:30 PM IST, பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (மொஹாலி)
2வது டி20 – செப்டம்பர் 22, 7:30 PM IST, விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் (நாக்பூர்)
3வது டி20 – செப்டம்பர் 25, 7:30 PM IST, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், (ஹைதராபாத்)
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர்.அஷ்வின், யுஸ்வேந்திரா சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா அணி:
ஆரோன் பின்ச் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், டேனியல் சாம்ஸ், சீன் அபோட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா, நாதன் எல்லிஸ்.