Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS : கேஎல் ராகுல், சூர்யகுமார் அதிரடி அரைசதம்…… 187 ரன்களை சேஸ் செய்யுமா ஆஸி?

ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான  சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் தேதி பரம் எதிரியான பாகிஸ்தான் அணியை  எதிர்கொள்கிறது. இதற்கிடையே சூப்பர் 12 சுற்றில் இடம்பிடித்திருக்கும் இந்தியா உட்பட அனைத்து அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது..

இந்திய அணி 4 பயிற்சி போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடி 1ல் வென்றது. இந்நிலையில் இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இந்திய நேரப்படி இன்று காலை 9:30 மணியளவில் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் கே.எல் ராகுல் சிறப்பாக ஆடி அரைசதம் விளாசினார். அதன்பின் கேஎல் ராகுல் 33 பந்துகளில் (6 பவுண்டரி, 3 சிக்ஸர்) 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.அதன்பின் விராட் கோலி – சூர்யகுமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

விராட் கோலி அதிரடியாக தொடங்கிய  நிலையில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்படி வந்த பாண்டியா 2 ரன்னில் வெளியேறிய போதிலும் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடினார். அதன் பின் வந்த தினேஷ் கார்த்திக் ஒரு 20 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார்.

கேன் ரிச்சர்ட்சன் வீசிய கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் சூர்யகுமார் யாதவ் பவுண்டரியுடன் சதமடித்த நிலையில், 4ஆவது பந்தில் 33 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸர்) 50 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யா அவுட் ஆனார். அதன்பின் உள்ளே வந்த அஸ்வின் சிக்ஸர் அடித்து, கடைசி பந்தில் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அக்சர் படேல் 6 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணியில் கேன் ரிச்சர்ட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Categories

Tech |