இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஆடுகளத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. இதற்கிடையே நேற்று பெய்த பலத்த கனமழையின் காரணமாக ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக 6:30 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில். இதுவரையில் போடவில்லை.
இந்தப்போட்டி மைதானத்தின் ஈரமான அவுட்பீல்டு காரணமாக தற்போது தாமதமாகிறது. ஆன்-பீல்ட் அம்பயர்களும் 4ஆவது நடுவரும் இரவு 7 மணிக்கு ஆடுகளத்தை ஆய்வு செய்து, டாஸ் போட முடியாது என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் அடுத்த ஆய்வை இரவு 8 மணிக்கு செய்ய இருக்கின்றனர்.. அதன்பின் போட்டி நடைபெறுமா என்பது தெரிய வரும். இதனை சரிசெய்யும் பணியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்..
Next inspection at 8 PM IST.#INDvAUS https://t.co/mxqSmLaxYm
— BCCI (@BCCI) September 23, 2022