ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது..
இந்தியாவுக்கு வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது..
இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2ஆவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று 7 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக 6:30 மணிக்கு டாஸ் போடப்படும் நிலையில், நேற்று முன்தினம் பெய்த பலத்த கனமழையின் காரணமாக ஆடுகளம் ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் நீண்ட நேரம் கழித்து 9 மணிக்கு மேல் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச முடிவு செய்தார். போட்டியும் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.. ஓவர்கள் குறைக்கப்பட்டதால் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை.. தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர்..
இதையடுத்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். போட்டி 8 ஓவர் என்பதால் தொடக்க முதலே பிஞ்ச் அதிரடியாக ஆடினார். கிரீன் 5 ரன்கள் எடுத்த நிலையில், அவுட் ஆகி வெளியேறினார்.. அதனைத் தொடர்ந்து வந்தவேகத்தில் அக்சர் பட்டேல் ஓவரில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். அதன்பின் டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுபுறம் அதிரடியாக ஆடி வந்த பின்ச் 31 (15)ரன்கள் எடுத்தநிலையில் பும்ரா வீசிய 5ஆவது ஓவரில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
இருப்பினும் கடைசியில் மேத்யூ வேட் கடந்த போட்டியை போல அதிரடியாக ஆடினார்.. குறிப்பாக ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி 8ஆவது ஓவரில் வேட் 3 சிக்ஸர்களை பறக்க விட்டார்.. கடைசி ஓவரில் 19 ரன்கள் கிடைக்க ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழந்து 90 ரன்கள் குவித்தது.. மேத்யூ வேட் 20 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.. ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளும், பும்ரா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இந்திய அணியின் தொடக்க வீரர்களா கேப்டன் ரோஹித் சர்மாவும், கே எல் ராகுலும் களம் இறங்கினர். தொடக்க முதலிலேயே ரோகித் சர்மா அதிரடி கட்ட தொடங்கினார். முதல் ஓவரில் ரோகித் சர்மா 2 சிக்ஸர்கள் கே.எல் ராகுல் 1 சிக்சர் அடிக்க 20 ரன்கள் சேர்ந்தது. அதன்பின் பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது அதனைத் தொடர்ந்து ஆடம் சாம்பா வீசிய 3ஆவது ஓவரில் 10 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஆட்டமிழந்தார்.
அதன் பின் வந்த விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ஜோடி சேர்ந்தனர். சாம்பா வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த கோலி 2ஆவது பந்தில் போல்டாகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து 3ஆவது பந்தில் வந்த வேகத்தில் சூர்யா குமார் யாதவும் எல்பிடபிள்யுவில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் பாண்டியா உள்ளே வந்தார். கடைசியில் இரண்டு ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட, 9 ரன்கள் எடுத்திருந்த பாண்டியா 5ஆவது பந்தில் ஆட்டம் இழந்தார்.இருப்பினும் அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது.
பின் கடைசி 6 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உள்ளே வந்த தினேஷ் கார்த்திக் முதல் பந்தில் கூலாக லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாசினார்.. தொடர்ந்து 2ஆவது பந்தில் ஒரு பவுண்டரி அடித்து போட்டியை முடித்து வைத்தார். பின் வெற்றி மகிழ்ச்சியில் தினேஷ் கார்த்திக்கை கட்டியணைத்தார் ரோஹித்.. இந்திய அணி 7.2 ஓவரில் 4 விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்து வென்றது..
கேப்டன் ரோஹித் 20 பந்துகளில் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 46 ரன்களுடன் களத்தில் இருந்தார்.. ஆஸ்திரேலிய அணியில் ஆடம் சாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-1 என்று சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்குமிடையே 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நாளை மறுநாள் 25ஆம் தேதி நடைபெறுகிறது..
https://twitter.com/trolee_/status/1573369368427528192
https://twitter.com/ashrohitian2/status/1573365434665279488
WHAT. A. FINISH! 👍 👍
WHAT. A. WIN! 👏 👏@DineshKarthik goes 6 & 4 as #TeamIndia beat Australia in the second #INDvAUS T20I. 👌 👌@mastercardindia | @StarSportsIndia
Scorecard ▶️ https://t.co/LyNJTtkxVv pic.twitter.com/j6icoGdPrn
— BCCI (@BCCI) September 23, 2022
Captain @ImRo45's reaction ☺️
Crowd's joy 👏@DineshKarthik's grin 👍
🎥 Relive the mood as #TeamIndia sealed a series-levelling win in Nagpur 🔽 #INDvAUS | @mastercardindia
Scorecard ▶️ https://t.co/LyNJTtl5L3 pic.twitter.com/bkiJmUCSeu
— BCCI (@BCCI) September 23, 2022