Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvAUS , #INDvSA : ஷமி, தீபக் சாஹருக்கு இடம்…. வேறு யாருக்கெல்லாம் வாய்ப்பு…. இதோ நீங்களே பாருங்க..!!

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2022, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பையில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 டி20 தொடரிலும் இந்திய அணி பங்கே இருக்கிறது

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை மற்றும் உள்நாட்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஐ தொடருக்கான இந்திய அணிகளை தேர்வு செய்ய அகில இந்திய மூத்த தேர்வுக் குழு திங்கள் கிழமையன்று (நேற்று) கூடியது.

ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

காத்திருப்பு வீரர்கள் :

முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

 

ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.

குறிப்பு: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடரின் போது கண்டிஷனிங் தொடர்பான வேலைகளுக்காக NCA க்கு அறிக்கை செய்வார்கள்.

Categories

Tech |