இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் ஷதாம் இஸ்லாம் 6, இம்ருல் கேயஸ் 6 ஆகியோர் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து முகமது மிதுனும் 13 ரன்னில் வெளியேறினார்.
இதனால் வங்கதேச அணி மிக விரைவாக மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் தடுமாறியது. அந்த அணி உணவு இடைவேளை-க்கு பின் அந்த அணியின் கேப்டன் மோமினுல் ஹாக் 37 ரன்னுக்கும் முகம்மத்துல்லா 43 ரன்னிலும் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிகுர் ரஹிம் ஷமி பந்தில் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அடுத்த பந்திலே மெஹிடி ஹாசன் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து தேனீர் இடைவேளை கொடுக்கப்பட்டது. பங்களாதேஷ் அணி 54 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அதை தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் பந்து வீச்சால் அந்த அணியின் லிண்டன் தாஸ் , டஜூல் இஸ்லாம் , இபாடட் ஹூசைன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் பங்களாதேஷ் அணி 58.3 ஓவர்களில் 150 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி 3 விக்கெட்டும் , அஸ்வின் , இஷாந்த் சர்மா , உமேஸ் யாதவ் தலா 2 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
Two in two for @MdShami11 as #TeamIndia head for Tea on Day 1 of the 1st Test with Bangladesh 140/7.
Updates – https://t.co/kywRjNI5G1 #INDvBAN pic.twitter.com/efaqpumwtq
— BCCI (@BCCI) November 14, 2019