Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : இன்றைய ஆட்டத்தில்…… பார்முக்கு வருவாரா ராகுல்?….. பலம் வாய்ந்த இந்தியாவை வீழ்த்துமா ஹாங்காங்?

2022 ஆசியக் கோப்பையின் 4வது ஆட்டத்தில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி இந்தியா ஹாங்காங்கை எதிர்கொள்கிறது.

2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும்.

அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள ஹாங்காங் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக சீரான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் நட்சத்திரங்கள் நிறைந்த வரிசை இருக்கிறது. மேலும் இந்த இந்திய அணியை தோற்கடிக்க ஹாங்காங் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தைவெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா பேட் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அசத்தி வருகிறார். விராட் கோலி தனது ஃபார்மை மீண்டும் பெற்றுள்ளதாக தெரிகிறது.. மேலும் சமீப காலங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர்.

வலது கை பேட்ஸ்மேனான விராட் கோலி ஒன்-டவுன் இறங்கி பேட்டிங் செய்கிறார். கடந்த ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்த அவர், இந்தப் போட்டியிலும் நல்ல ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்தியாவின் வலது கை பேட்ஸ்மேனானசூர்யகுமார் யாதவ் மிடில் ஆர்டரில்ஆடுகிறார். கடந்த போட்டியில் 18 ரன்களைக் குவித்த அவர், இந்த போட்டியில் அதைவிட அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளார்..இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் கடைசி ஆட்டத்தில் அவர் டக் அவுட் ஆனார் ஆனால் வரவிருக்கும் இந்த ஆட்டத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க முயற்சி செய்ய வேண்டும்..

ஹாங்காங்கின் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை லெக் பிரேக் பந்துவீச்சாளரான இவர் அணியை வழிநடத்துகிறார். இந்த பெரிய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அவர் தனது அணிக்கு சிறப்பாக செயல்பட்டு போராடுவதை நோக்கமாகக் கொண்டிருப்பார்.

இந்திய அணி : ரோஹித் சர்மா (c , கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (WK), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

ஹாங்காங் அணி : யாசிம் முர்தாசா, நிசாகத் கான் (c ), பாபர் ஹயாத், கிஞ்சித் ஷா, அய்சாஸ் கான், ஸ்காட் மெக்கெக்னி, ஜீஷன் அலி (WK), ஹாரூன் அர்ஷாத், எஹ்சான் கான், முகமது கசன்ஃபர், ஆயுஷ் சுக்லா

Categories

Tech |