Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvHK : பாண்டியா இல்லை…. டாஸ் வென்ற ஹாங்காங்….. பேட்டிங் ஆட களமிறங்கும் இந்தியா..!!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

2022 ஆசியக் கோப்பையின் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஹாங்காங் இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சூப்பர் 4 இடத்தை உறுதி செய்யும்.

அதேசமயம் நல்ல ஃபார்மில் உள்ள ஹாங்காங் தொடர்ந்து 2ஆவது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக சீரான கிரிக்கெட்டை விளையாடி வருகின்றனர். எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியில் நட்சத்திரங்கள் நிறைந்த வரிசை இருக்கிறது. மேலும் இந்த இந்திய அணியை தோற்கடிக்க ஹாங்காங் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தைவெளிப்படுத்த வேண்டும். விராட் கோலி தனது ஃபார்மை மீண்டும் பெற்றுள்ளதாக தெரிகிறது.. மேலும் சமீப காலங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பேட்டிங்கில் களமிறங்க இந்திய அணி தயாராக உள்ளது. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிசப் பண்ட் அணியில்  இடம் பெற்றுள்ளார்.

இந்திய லெவன்: ரோஹித் ஷர்மா (c ), கேஎல் ராகுல், விராட்கோலி, சூர்யகுமார்  யாதவ், ரிஷப் பண்ட்.  (wk ), ஆர். ஜடேஜா, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யூசுவேந்திர சாஹல்.

ஹாங்காங் XI: என் கான் (c ), ஒய் முர்தாசா, பி ஹயாத், கே ஷா, ஏ கான், எஸ் மெக்கெக்னி (wk ), இசட் அலி, எச் அர்ஷத், இ கான், ஏ சுக்லா, எம் கசன்ஃபர்.

Categories

Tech |