Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNED : டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு…!!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியா 8 நகரங்களில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது குரூப் 1 இல் 6 அணிகள் குரூப் 2ல் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் இன்றைய போட்டியில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப்போட்டி மதியம் 12:30 மணியளவில் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்கும்..

T20 WC 2022. இந்தியா XI:

ரோஹித் ஷர்மா (கே), கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், அர்ஷ்தீப் சிங், புவனேஸ்வர் குமார், முகமது ஷமி.

T20 WC 2022. நெதர்லாந்து XI:

விக்ரம்ஜித் சிங், எம் ஓ டவுட், பி டி லீட், சி அக்கர்மேன், டி கூப்பர், எஸ் எட்வர்ட்ஸ் (கே), டி பிரிங்கிள், எஃப் கிளாசென், பி வி மீகெரென், எஸ் அகமது, எல் வி பீக்.

Categories

Tech |