Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ…. செம பவுலிங்…. “10 விக்கெட்டுகள் வீழ்த்தி”….. நியூஸிலாந்தின் அஜாஸ் பட்டேல் சாதனை… குவியும் பாராட்டுக்கள்.!!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி நியூஸிலாந்தின் அஜாஸ்பட்டேல் சாதனை படைத்துள்ளார்..

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், நேற்று 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 325 ரன்களுக்கு இன்று ஆல் அவுட்டானது.. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயாங் அகர்வால் 150 ரன்கள் குவித்தார்.. மேலும் அக்சர் பட்டேல் 52 ரன்களும், சுப்மன் கில்  44 ரன்களும் எடுத்தனர்..

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் அனைவருமே ஒரே ஒருவரிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்..  அதாவது, நியூசி அணியின் அஜாஸ் பட்டேல் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.. இதனால் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் அஜாஸ் பட்டேல்..  47.5 ஓவர் வீசிய 119 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அஜாஸ் மும்பையை பூர்வமாக கொண்டவர்..

ஏற்கனவே இங்கிலாந்தின் ஜிம் லேக்கர், இந்தியாவின் அணில் கும்ப்ளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.. அஸ்வின் கூட எழுந்து நின்று கைதட்டிய வீடியோவை பிபிசிஐ வெளியிட்டுள்ளது.. இந்திய அணி  வீரர்களும் பாராட்டினர்… பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |