Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvNZ டி20 தொடர்… “விலகிய வில்லியம்சன்”…. அணி அறிவிப்பு…. கேப்டன் இவர் தான்!!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து வில்லியம்சன் விலகியுள்ளார்..

துபாயில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதின.. கடந்த 14ஆம் தேதி நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வென்றது.

இதையடுத்து இந்திய அணிக்கு எதிரான 3 டி20 போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி.. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை நியூசிலாந்து அணி அறிவித்துள்ளது.. இதில் டி20 போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு தயாராவதால் டி20 தொடரில் இருந்து விலகுவதாக கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.. கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டீம் சவுதி நியூசிலாந்து அணியை வழிநடத்துவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.. அதே நேரத்தில் கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் இரு தொடர்களுக்கும் உள்ளனர்.

இந்தியாவுக்கான நியூசிலாந்து டி20 அணி :

டாட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட் (வாரம்), இஷ் சோதி, டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன்..

இந்தியாவுக்கான நியூசிலாந்து டெஸ்ட் அணி :

கேன் வில்லியம்சன் (c), டாம் ப்ளன்டெல் (wc ), கைல் ஜேமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சான்ட்னர், வில் சோமர்வில்லே, டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர் வில் யங்..

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஆர் யுஸ்வேந்திர சாஹல், ஆர்.அஸ்வின், அக்சர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நாளை (17ஆம் தேதி) நடைபெறுகிறது..

 

Categories

Tech |